விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது!
ADDED : 525 days ago
தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததை அடுத்து, மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த பில்லா மற்றும் தீனா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெளியான சூப்பர் ஹிட் படங்களும் வெளியாக உள்ளன. அந்த வகையில், கடந்த 2012ம் ஆண்டு அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், அதையடுத்து நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற இரண்டு படங்களும் விரைவில் ரீ ரிலீஸ் ஆக உள்ளன.