மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி
வரும் மே மூன்றாம் தேதி சுந்தர்.சி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் ‛அரண்மனை 4' படம் திரைக்கு வருகிறது. தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தின் பிரமோசன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதையடுத்து மே 10ம் தேதி சந்தானம் நடித்துள்ள, ‛இங்க நான்தான் கிங்கு' மற்றும் கவின் நடித்துள்ள ‛ஸ்டார்' ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மே மாதம் பத்தாம் தேதி மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கி உள்ள ‛ரசவாதி' என்ற படமும் திரைக்கு வருகிறது. அர்ஜூன் தாஸ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ், அனிருத், கார்த்தி, துல்கர் சல்மான், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகிய 6 பேர் வெளியிட்டனர். மெளனகுரு போன்று இதுவும் வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கிறது.