தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள்
ADDED : 534 days ago
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் டில்லியில் நடந்து வரும் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்ளப் போகிறார். இப்படத்தில் கமலுடன் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்பு, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, நாசர் என பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில், தற்போது பாலிவுட் சினிமாவைச் சேர்ந்த பங்கஜ் திரிபாதி, அலி பசல் ஆகிய இருவரும் தக்லைப் படத்தில் இணைந்துள்ளார்கள். இவர்களில் தற்போது அலி பசல் டில்லியில் நடைபெறும் படப்பிடிப்பில் சிம்புவுடன் இணைந்தது நடித்துக் கொண்டிருக்கிறார்.