புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன்
ADDED : 534 days ago
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, நானே வருவேன் என பல படங்களை இயக்கிய செல்வராகவன், பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசூரன், ராயன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் ஏற்கனவே தான் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி வருகிறார். மேலும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவ்வப்போது சில கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் செல்வராகவன், தற்போதும் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், ‛‛ஐயோ இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே. இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒருபோதும் கலங்காதீர்கள். புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும். இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் செல்வராகவன்.