தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன்
ADDED : 552 days ago
சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார் . இந்த நிலையில் நெல்சன் தற்போது புதிதாக பிலாமென்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதாக அறிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது, நான் எனது 20 வயதில் மீடியா பயணத்தை தொடங்கினேன். இதில் நிறைய வெற்றி, தோல்வியை கடந்து வந்தேன். அந்த சமயத்தில் எனக்கென்று தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இப்போது இது நிறைவேறியுள்ளது. இந்த நிறுவனத்தின் லட்சியம் ரசிகர்களுக்கு நல்ல படங்களை தந்து சந்தோஷப்படுத்துவது. மேலும், இந்நிறுவனத்தின் முதல் பட அறிவிப்பு வருகின்ற மே 3ம் தேதி அன்று வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.