உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு

மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு

மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித்குமார் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் வருகிற மே பத்தாம் தேதி முதல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது மே பத்தாம் தேதி தொடங்கும் அப்படத்தின் படப்பிடிப்பில் அஜித் அல்லாமல் மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளையே ஆதிக் ரவிச்சந்திரன் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு விரைவில் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கும் அஜித் குமார், அப்படத்தை முடித்துவிட்டு, ஜூன் மாதத்தில் இருந்து குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !