முதலாவது 4ம் பாக திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4?
ADDED : 524 days ago
தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகத்திரைப்படங்கள் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம். ஆனால், ஒரு படத்தின் நான்காம் பாகம் என்பது மிகவும் அபூர்வமான ஒரு விஷயம். அப்படி ஒரு அபூர்வமாக 'அரண்மனை 4' நாளை வெளியாக உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர் சி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். முந்தைய மூன்று பாகங்களைப் போலவே இந்தப் படத்திற்கும் வரவேற்பு கிடைக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.
'அரண்மனை' படத்தின் முதல் பாகம் 2014ல், இரண்டாம் பாகம் 2016ல், மூன்றாகம் பாகம் 2021ம் ஆண்டில் வெளியானது.
இதற்கு முன்பு 'காஞ்சனா' படம் மூன்று பாகங்களாகவும், 'சிங்கம்' படம் மூன்று பாகங்களாகவும் வெளிவந்தது. 'காஞ்சனா' பட பாகங்களை முனி சீரிஸ் எனவும் அழைத்து 'காஞ்சனா 3' படத்தை முனி 4 என்றும் குறிப்பிட்டார்கள்.