உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள்

ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள்

டாடா படத்தை அடுத்து கவின் நடித்துள்ள படம் ஸ்டார். இளன் இயக்கியுள்ள இந்த படம் வருகிற பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். தற்போது இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஸ்டார் படத்தில் மொத்தம் பத்து பாடல்கள் இடம் பெற்று இருப்பதாக படத்தின் டிராக் லிஸ்ட்டையும், பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பத்து பாடல்களும் பத்து விதமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்த பத்து பாடல்களில் யுவன் சங்கர் ராஜா நான்கு பாடல்களில் பின்னணி பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !