உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது

விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது

வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படம் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வருகிறது. இதை அடுத்து விஜய்யின் 69வது படத்தை எச்.வினோத் இயக்குவதாக கூறப்படும் நிலையில், இந்த படம் குறித்து அறிவிப்பு விஜய்யின் பிறந்த நாளையொட்டி ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த ஆண்டுக்குள் அப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டில் அப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் விஜய் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !