நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல்
அசோக் செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருவன் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ஞானவேல். அதன்பிறகு சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை இயக்கியவர், தற்போது ரஜினி நடிப்பில் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். ரஜினியுடன் அமிதாப்பச்சன், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இந்த படத்தை முடித்ததும் நானியை வைத்து ஒரு படம் இயக்குகிறார் ஞானவேல். அப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேரடியாக உருவாகிறது. அதோடு, வேட்டையன் படத்தில் ராணா நடிக்கும் வேடத்தில் முதலில் நானி தான் நடிப்பதாக இருந்தது. கால்சீட் பிரச்சனை காரணமாக அவர் அப்படத்தில் இருந்து விலகியதால் ராணா ஒப்பந்தம் செய்யப்பட்டார் .
வேட்டையன் படத்தில் நடிக்க நானியிடம் கதை சொன்னபோதே, அவரை ஹீரோவாக வைத்து இயக்க இன்னொரு கதையும் சொல்லி இருக்கிறார் ஞானவேல். அந்த கதையில்தான் அடுத்து நானி நடிக்கப்போகிறார்.