ஓய் என்ற தமிழ் படத்தில் நடித்தவர் ஈஷா ரெப்பா. அதன்பின் தெலுங்கில் தான் அதிகம் நடிக்கிறார். தற்போது மலையாளத்தில் வெற்றி பெற்ற ‛ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக போட்டோசூட்டை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛நல்ல இயக்குனர்கள் நல்ல படங்களையே இயக்குவார்கள். இந்த கதை பிடித்திருந்தது. நான் எப்போதும் படத்தின் கதையை நம்பி தான் அதில் நடிக்கலாமா, வேண்டாமா என முடிவு செய்வேன். பணத்தை வைத்து அல்ல'' என்றார்.