'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு!
மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி உள்ளிட்ட பலரது நடிப்பில் 1993ம் ஆண்டு வெளியான படம் மணிசித்திரதாழு. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படம் அப்போது 7 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தை தான் பின்னர் கன்னடத்தில் ஆப்தமித்ரா, தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார் பி. வாசு.
தமிழில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா நடித்த சந்திரமுகி படம் சென்னையில் மட்டும் ஓராண்டு ஓடி வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது மணிசித்திரதாழு படம் குறித்து போஸ்டருடன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அதில், ‛மணிசித்திரதாழு படத்தை கிட்டத்தட்ட 50 முறை பார்த்திருக்கிறேன். இயக்குனர் பாசில் அவர்களின் கிளாசிக் படம் இது. ஷோபனா சிறப்பாக நடித்து தேசிய விருது வாங்கினார். மோகன்லால் அவர்களால் இந்த தேசத்துக்கே பெருமை' என்று பதிவிட்டு இருக்கிறார் செல்வராகவன்.