உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை கனகலதா காலமானார்

நடிகை கனகலதா காலமானார்

மலையாள சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகை கனகலதா. 1979ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கிய அவர் ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் குணசித்தர வேடங்களில் நடித்தார். கடைசியாக 'சம்மதத்தின்ட வெள்ளரிபரவுகள்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. 360க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கனகலதா தமிழில் உனக்காக பிறந்தேன், இருட்டு, கற்பூரமுல்லை, உன்னை பார்த்த நாள், கடவுள் சாட்சி, நாடோடி கூட்டம் உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

63 வயதான கனகலதா பார்கின்சன் என்ற நரம்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். கனகலதா மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !