முடிவுக்கு வரும் ‛அருவி' சீரியல்
ADDED : 517 days ago
தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அருவி தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஜோவிதா லிவிங்ஸ்டன், கார்த்திக் வாசு, அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த தொடர் விரைவில் முடிய உள்ளது. இந்த தொடரின் இறுதி நாளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி சீரியலில் நடித்த பிரபலங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். அருவி தொடரை ரொம்பவும் மிஸ் செய்வோம் என ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.