உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு நிறைவு

நயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு நிறைவு

அன்னப்பூரணி படத்திற்கு பின் நயன்தாரா நடித்து வந்த படம் ‛மண்ணாங்கட்டி - சின்ஸ் 1960'. இதில் அவர் கதையின் நாயகியாக நடிக்க, யோகி பாபு, கவுரி கிஷன், தேவதர்ஷினி, நரேந்திர பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யு-டியூப் புகழ் ட்யூட் விக்கி இயக்கி உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கியது. பல்வேறு காலக்கட்டங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இதை நயன்தாரா, இயக்குனர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !