அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது
ADDED : 529 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' படத்தில் நடித்து வரும் அஜித் குமார், அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், மே பத்தாம் தேதி முதல் படப்பிடிப்பு நடக்கயிருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்று(மே 10) ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.
அஜித்குமார் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அஜித்தின் ஓப்பனிங் பாடல் மற்றும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆக்ஷன் காட்சியும் முதல் கட்ட படப்பிடிப்பில் படமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஐதராபாத்திலேயே நடைபெற உள்ளதால் அதற்கான செட் அமைப்புக்கும் பணிகளும் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறதாம்.