சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன்
ADDED : 515 days ago
பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும், தமிழில் தனுசுடன் கொடி, அதர்வாவுடன் தள்ளிப் போகாதே, ஜெயம் ரவியுடன் சைரன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் பைசன் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கில் அனுபமா நாயகியாக நடித்து வெளியான கார்த்திகேயா-2, டில்லு ஸ்கொயர் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து ஒரு கோடியில் இருந்த தனது சம்பளத்தை 2 கோடியாக உயர்த்தி விட்டுள்ளாராம். அதிலும், டில்லு ஸ்கொயர் படத்தில் அனுபமாவின் படு கவர்ச்சியான நடிப்புக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை அடுத்து கிளாமர் ஹீரோயினாகவும் உருவெடுத்திருக்கிறார்.