வானத்தைப்போல ஸ்வேதா திருமணம்: காதலரை மணந்தார்
ADDED : 544 days ago
கன்னட சின்னத்திரையில் இருந்து 'வானத்தைப் போல' தொடரின் மூலமாக தமிழுக்கு வந்தவர் ஸ்வேதா. தற்போது 'கண்ணெதிரே தோன்றினாள்' தொடரில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஸ்வேதா தனது நீண்ட நாள் காதலர் விராந்த் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருவரும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
ஸ்வேதா, விராந்த் திருமணம் நேற்று கர்நாடக மாநிலம் தும்கூரில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். விராந்த் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஸ்வேதா திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.