நண்பரையே திருமணம் முடித்த ஸ்வேதா கெல்கே! வைரலாகும் புகைப்படங்கள்
ADDED : 594 days ago
வானத்தை போல தொடரில் துளசி கதாபாத்திரத்தில் முதலில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா கெல்கே. தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் கண்ணெதிரே தோன்றினாள் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஸ்வேதா தன்னுடன் கல்லூரியில் படித்த விராந்த் ரஞ்சன் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து நேற்றைய தினம் ஸ்வேதாவின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் வைத்து இருவருக்கும் கோலாகலமாக திருமணம் முடிந்துள்ளது. ஸ்வேதா - விராந்த் ரஞ்சன் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலானது,. ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.