மலேசியாவில் ‛தி கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டம்!
ADDED : 512 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய்யுடன் இணைந்து நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இப்படத்தின் டப்பிங் பணிகளை விஜய் 50 சதவீதம் பூர்த்தி செய்துள்ளார்.
இந்த நிலையில் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் மலேசியாவில் நடத்த தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை முதலில் மலேசியாவில் நடத்த திட்டமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.