உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கைவிடப்படும் விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப் தொடர்!

கைவிடப்படும் விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப் தொடர்!


ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிய வெப் தொடர் ஒன்றில் கடந்த சில மாதங்களாக நடித்து வந்தார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ஜாக்கி செராப் நடித்துள்ளார்.

இதனை ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த நிலையில் இந்த வெப் தொடரின் பட்ஜெட் குறிப்பிட்டதை விட அதிகமானதால் இப்போது ஹாட் ஸ்டார் இந்த வெப் தொடரைத் கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !