சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர்
ADDED : 591 days ago
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் எனது 44வது படத்தில் நடிக்க போகிறார் சூர்யா. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 40 நாட்கள் நடைபெற உள்ளது. இதையடுத்து பாலிவுட்டில் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் கர்ணா படத்தில் நடிக்கிறார் சூர்யா. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் பணியாற்றிய ஹாலிவுட் பைட் மாஸ்டர் நிக் பாவல் என்பவர் கமிட்டாகி இருக்கிறார். இந்த கர்ணா படத்தில் இடம்பெரும் சரித்திரகால வாள் சண்டை காட்சிகள் ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக தயாராக உள்ளதாம்.