மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
481 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
481 days ago
தென்னிந்தியத் திரையுலகத்தில் மலையாள சினிமா தவிர மற்ற மொழி சினிமா உலகம் கடந்த நான்கு மாதங்களாக கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. எந்த ஒரு படமும் பெரும் வெற்றி என வசூலில் சாதித்து லாபத்தைக் கொடுக்கவில்லை.
லோக்சபா தேர்தல், பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள், தேர்வுகள் காரணமாக கடந்த சில வாரங்களாக நிலைமை மிகவும் மோசமாகவே இருந்தது. தேர்தல், தேர்வுகள் முடிந்தாலும் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் பத்து நாட்கள் வரை நடைபெற உள்ளது.
இதன் காரணமாக தெலங்கானாவில் அடுத்த பத்து நாட்களுக்கு சிங்கிள் தியேட்டர்களை மூட தெலுங்கானா தியேட்டர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். ஜுன் மாதத்திற்குப் பிறகே பான் இந்தியா படங்கள் தெலுங்கில் வர உள்ளன. அதன் பிறகுதான் தியேட்டர்களை நடத்த முடியும் என்பதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்களாம்.
'கல்கி 2898 ஏடி, புஷ்பா 2' ஆகிய படங்களை இந்த வருடத்திற்கான பெரிய படங்களாக தெலுங்குத் திரையுலகினர் எதிர்பார்க்கிறார்கள்.
481 days ago
481 days ago