உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஹுக்கும்' பாடலை மறப்பீர்கள் : 'தேவரா' தயாரிப்பாளர்

'ஹுக்கும்' பாடலை மறப்பீர்கள் : 'தேவரா' தயாரிப்பாளர்


நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் இடம் பெற்ற 'ஹுக்கும்' பாடலும் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக அமைந்தது. யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளையும் கடந்தது.

அனிருத் தற்போது தெலுங்கில் இசையமைத்து வரும் படம் 'தேவரா'. கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் 'பியர்' பாடல் மே 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தயாரிப்பாளர் நாக வம்சி, “உங்களுக்கு முன்பே இப்பாடலைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னை நம்புங்கள். 'ஹுக்கும் பாடலை நீங்கள் மறந்து போவீர்கள். அனிருத்தின் அடுத்த லெவல் மாஸ் இது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கில் அனிருத் இதற்கு முன்பு இசையமைத்த, “அஞ்ஞாதவாசி, கேங் லீடர்” ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் 'தேவரா' படம் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !