காதலிக்க நேரமில்லை சந்திராவின் ரீ-என்ட்ரி! எந்த சீரியல் தெரியுமா?
ADDED : 530 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை தொடர் 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பேவரைட்டான தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் ஹீரோயினாக நடித்த சந்திரா, இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். காதலிக்க நேரமில்லை பாசமலர் தொடருக்கு பின் தமிழ் சீரியல்களில் நடிக்காமல் இருந்த சந்திரா, தமிழில் நல்ல கதை கிடைக்கவில்லை என்று ஒருமுறை பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது கயல் சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். கயல் சீரியலில் சந்திராவின் என்ட்ரி நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.