உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கையில் கட்டுடன் கேன்ஸ் புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்

கையில் கட்டுடன் கேன்ஸ் புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்


உலகத் திரைப்பட விழாக்களில் முக்கியமான ஒன்று பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா. அங்கு நடைபெறும் விழாவில் எப்போதுமே கலந்து கொள்பவர் ஐஸ்வர்யா ராய். அதற்காக நேற்று மும்பை விமான நிலையத்திற்கு தனது மகள் ஆராத்யாவுடன் வந்தார்.

அப்போது அவரது வலது கையில் கட்டு போடப்பட்டிருந்தது. எதனால் அந்த காயம் ஏற்பட்டு கட்டு போடப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. இருந்தாலும் அந்த கட்டுடனேயே அவர் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றுள்ளார்.

காயம் ஏற்பட்ட நிலையிலும் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யாவின் ஆர்வத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

மே 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !