4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்'
ADDED : 507 days ago
மலையாளத்தில் பிருத்விராஜ்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்த ‛ஆடு ஜீவிதம்' படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. முன்னதாக, தான் கர்ப்பிணியாக இருந்தபோது இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் அமலா பால். விரைவில் அவருக்கு டெலிவரி நடைபெற உள்ள நிலையில், தற்போது அவர் மலையாளத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‛லெவல் கிராஸ்' என்ற படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை அர்பாஸ் அயூப் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் வெளியிடுகிறார். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.