உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்!

மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்!


மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்தாண்டு வெளியான படம் அயோத்தி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு பல வருடங்களுக்கு பிறகு சசிகுமாருக்கு ஒரு ஹிட் படமாகவும் அமைந்தது. குறிப்பாக, மனித நேயத்தை வெளிப்படுத்தும் கதையம்சத்தில் இப்படம் உருவானது.

இந்த நிலையில் மீண்டும் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அயோத்தி வெற்றிப்பட கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !