உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெண் வேடத்தில் அசார்

பெண் வேடத்தில் அசார்

நட்சத்திர சின்னத்திரை தொகுப்பாளர் அசார். திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். சினிமாவில் நடிக்க பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு வரும் அசார். அமீர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது அந்த படம் தொடங்கப்படவில்லை. என்றாலும் தொகுப்பாளர் பணியிலும் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இயங்கி கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது படங்களை வெளியிட்டு ஏராளமான பாலோயர்களை வைத்திருக்கிறார். இந்த நிலையில் திடீரென பெண் வேடமணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து அதனை வெளியிட்டிருக்கிறார். இது சினிமா வாய்ப்பு தேடுவதற்கான முயற்சி என்று விமர்சனங்கள் எழுந்தாலும் இந்த படங்கள் வைரலாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !