வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா
ADDED : 541 days ago
சின்னத்திரையில் இருந்து வந்த கவின் தற்போது முக்கிய நடிகராக வளர்ந்து வருகிறார். அவர் நடித்தா 'டாடா' படம் வெற்றி பெற்றது. நடிகர் கவின் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஸ்டார்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்து நடன இயக்குனர் சதீஷ் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விகர்ணன் அசோகன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா இணைந்து நடிக்கின்றனர். இதற்கு 'மாஸ்க்' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். இதில் ருஹானி ஷர்மா, பால சரவணன், சார்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.