உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விடுதலை 2ம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா?

விடுதலை 2ம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'விடுதலை பாகம் 1'. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் விஜய் சேதுபதி, சூரி உடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக பல கட்டமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டவில்லை. இந்த நிலையில் தென்காசியில் நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பில் இப்போது எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முறையாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !