உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா

'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். அவருக்கு கதீஜா, ரஹீமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்களில் மூத்த மகள் கதீஜா அப்பாவைப் போலவே இசைத் துறையில் ஈடுபட்டு பின்னணிப் பாடகியாக இருக்கிறார். எம்.ஏ படித்து முடித்துள்ளார்.

இளைய மகள் ரஹீமா தற்போது துபாயில் உள்ள ஐசிசிஎ என்ற குக்கிங் பள்ளியில் சமையல்கலை படிப்பைப் படித்து முடித்துள்ளார். அங்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார் ஏஆர் ரஹ்மான்.

“எனது சின்ன மகள் ரஹீமா தற்போது 'செப்' ஆகிவிட்டார். அப்பாவாக பெருமை, எல்லாப் புகழும் இறைவனுக்கே,” என்று மகளைப் பற்றி ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

ரஹ்மானின் ஒரே மகன் அமீனும் பின்னணிப் பாடகராக உள்ளார். ரஹ்மானின் வாரிசுகள் இருவர் அப்பாவைப் போலவே இசைத்துறையில் இருக்க, இளைய மகள் செப் ஆகியிருப்பது ஆச்சரியம்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !