மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
479 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
479 days ago
தெலுங்குத் திரையுலகத்தில் 'மெகா குடும்பம்' என அழைக்கப்படும் குடும்பம் நடிகர் சிரஞ்சீவியின் குடும்பம். அவரது தம்பிகள் நாகேந்திர பாபு, பவன் கல்யாண் நடிகர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் உள்ளார்கள். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் நடிகர்களாக இருக்கிறார்கள்.
பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஆந்திர சட்டசபை தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறார். அக்கட்சியின் பொதுச் செயலாளராக நாகேந்திர பாபு உள்ளார்.
சிரஞ்சீவியின் மனைவி சுரேகாவின் அண்ணன் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகன் நடிகர் அல்லு அர்ஜுன். ஆந்திர சட்டசபை தேர்தலில் பவன் கல்யாணின் எதிரி கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நந்தியால் தொகுதியில் போட்டியிடும் அவரது நண்பர் ரவி சந்திர கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். இந்த விவகாரம் சிரஞ்சீவி குடும்பத்தினரை கோபமடைய வைத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நாகேந்திர பாபு அவரது எக்ஸ் தளத்தில் அல்லு அர்ஜுன் பெயரைக் குறிப்பிடாமல், “போட்டியாளர்களுடன் கை கோர்க்கும் மனிதனை நம்முடைய சொந்தக்காரனாக கருத முடியாது. நம்மை ஆதரிக்கும் வெளியாட்களை நம் குடும்பமாகக் கருதுவோம்,” என பதிவிட்டிருந்தார். இது அல்லு அர்ஜுன் ரசிகர்களை ஆத்திரமடைய வைத்தது. அவர்கள் நாகேந்திரபாபுவை கடுமையாக விமர்சித்தார்கள்.
இந்நிலையில் தன்னுடைய எக்ஸ் கணக்கை டிஆக்டிவேட் செய்தார் நாகேந்திர பாபு. இன்று அதை மீண்டும் ஆக்டிவேட் செய்து, “என்னுடைய டுவீட்டை டெலிட் செய்துவிட்டேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் சிரஞ்சீவி குடும்பத்தாருக்கும், அல்லு அர்ஜுனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
479 days ago
479 days ago