உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு

திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு

ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகை ரோஜா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்து வருகிறார். சமீபத்தில் ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் இரண்டும் ஒரே நாளில் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு இருக்கிறார் ரோஜா.

இந்நிலையில் இன்று அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ஒவ்வொரு ஆண்டும் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து நான் சாமி தரிசனம் செய்து வருகிறேன். நேற்று இரவு கிரிவலம் செய்தேன். இன்று சாமி தரிசனம் செய்திருக்கிறேன். அண்ணாமலையாரின் அருளால் அனைத்து மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்ததாக கூறிய ரோஜா, ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !