விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி
ADDED : 501 days ago
கோட் படத்தில் நடித்து வரும் விஜய், இதையடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்க போகிறார். தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை முடித்துவிட்டு நடிகர் நடிகை தேர்வில் ஈடுபட்டு வருகிறார் வினோத். அந்த வகையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு சூர்யா உடன் சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளியிடம் அவர் பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சூரரைப்போற்று படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளி தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.