உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ்

கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ்

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கி உள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 27ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில், இந்த படத்தில் பிரபாஸின் நண்பனாக புஜ்ஜி என்ற ஒரு ரோபோ நடித்திருக்கிறது. அந்த ரோபோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் கொடுத்திருக்கிறார் என்று அறிவித்துள்ளார்கள். அதோடு இந்த புஜ்ஜி என்ற ரோபோவை வருகிற 22ம் தேதி அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !