உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓட்டளித்த கர்ப்பிணி தீபிகா படுகோனே

ஓட்டளித்த கர்ப்பிணி தீபிகா படுகோனே

லோக்சபா தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று அதற்கான ஓட்டுப்பதிவு நடந்தது. பல பாலிவுட் பிரபலங்கள் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்தனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே அவரது கணவர் ரன்வீர் சிங் உடன் வந்து ஓட்டளித்தார். கர்ப்பிணியான தீபிகா ஓட்டளிக்க வந்த போது அவரை புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக தீபிகாவை ஒரு கையில் அணைத்தபடி அழைத்துச் சென்றார் ரன்வீர். யாரும் தன்னை தள்ளிவிட்டுவிடக் கூடாது என தனது கர்ப்ப வயிற்றில் கை வைத்தவாறே கவனத்துடன் சென்றார் தீபிகா.

தாய்மை பற்றி தீபிகா, ரன்வீர் அறிவித்த பின்பு தீபிகா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அதனால், அவரது கர்ப்பம் குறித்து சில ஊடங்களில் சந்தேகத்தை எழுப்பினர். இந்நிலையில் தீபிகா கர்ப்ப வயிற்றுடன் வந்து ஓட்டளித்தது அந்த ஊடகங்களின் சந்தேகத்திற்கு பதிலளித்தது.

தீபிகாவுக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !