மேலும் செய்திகள்
கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த்
475 days ago
வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம்
475 days ago
பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன்
475 days ago
நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
475 days ago
ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ள படம் 'போகுமிடம் வெகுதூரமில்லை'. விமல், மெரி ரிக்கெட்ஸ், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் கருணாஸ் பேசியதாவது : நான் கடந்த 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் இடையில் நான்கைந்து ஆண்டுகளாக நடிக்கவில்லை. ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை. சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நான் மேடை பாடகனாக இருந்து பாடல்களுக்கு இசை அமைத்து, மிமிக்ரி கலைஞனாக வளர்ந்துதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஆனால் சொந்தமாக வீடுகூட இல்லை. அதைப் பற்றி கவலைப்படவும் இல்லை. இன்றைக்கு இருக்கிற இளைஞர்களுக்கு என்னிடம் என்னென்ன திறமை இருக்கிறது என்பது கூட தெரியாது. என்னோடு மது அருந்தியவர்களே எனக்கு கெடுதல் செய்த வரலாறும் உண்டு.
திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். நான் ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக் கதையைக் கேட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன். இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும். என்றார்.
475 days ago
475 days ago
475 days ago
475 days ago