உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி

பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி

விஷால் நடித்த திமிரு படத்தில் வில்லியாக நடித்து ஒரே படத்தில் தென்னிந்திய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. அதன் பிறகு சமீபத்தில் பிரபாஸ் நடித்த சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுடன் சில நாட்களுக்கு முன்பு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான தலைமைச் செயலகம் என்கிற வெப் சீரிஸிலும் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வரும் ஓஜி என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா ரெட்டி.

இந்த கதாபாத்திரம் குறித்து அவர் சமீபத்தில் கூறும்போது, “இது முதலில் நடிகை தபு நடிப்பதற்காக எழுதப்பட்டிருந்த கதாபாத்திரம். அதன்பிறகு தான் அவருக்கு பதிலாக இது என்னை தேடி வந்துள்ளது. ஸ்கிரிப்ட் படிக்கும்போதே அதில் தபுவின் பெயர் இடம் பெற்று இருந்தது. அவ்வளவு பவர்புல்லான கதாபாத்திரம்” என்று கூறியுள்ளார் ஸ்ரேயா ரெட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !