மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
497 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
497 days ago
சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தாயின் கையில் இருந்த குழந்தை திடீரென்று தவறி பால்கனியில் விழுந்தது. அதையடுத்து அங்குள்ள பொது மக்களால் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. என்றாலும் பின்னர் அந்த குழந்தையின் தாயாரை சோசியல் மீடியாவில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததை அடுத்து மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் அது குறித்து நடிகை கல்யாணி இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு குழந்தை பால்கனியில் தவறி விழுந்ததும் அதனை அங்குள்ள பொதுமக்கள் காப்பாற்றியதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன்பிறகு நடந்த சம்பவங்களை ஜீரணிக்கவே முடியவில்லை. அந்த குழந்தையின் தாயாரை அனைவரும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து டார்ச்சர் கொடுத்திருக்கிறார்கள். அது அவருக்கு மிகப்பெரிய மனவலியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே மன உளைச்சலில் இருந்ததால் சிகிச்சை எடுத்து வந்தவருக்கு அந்த மன வலி இன்னும் அதிகமாகி இருக்கிறது. அதனால் தான் இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக குழந்தை பால்கனியில் தவறி விழுந்திருக்கிறது. இந்த சம்பவம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தை புரிந்து கொள்ளாமல் அவரை அனைவருமே கடுமையாக விமர்சனம் செய்து வந்திருக்கிறார்கள். அதனால் தான் இது போன்ற தவறான முடிவுக்கு அவர் சென்றுள்ளார். இப்படி ஒரு சம்பவம் நடந்ததும் அவரை சமாதானப்படுத்தி இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை தான் சொல்ல வேண்டும். மாறாக, உனக்கெல்லாம் குழந்தை தேவையா என்பது போன்ற அவரை மோசமாக விமர்சனம் செய்ததால் தான் இன்று அந்த குழந்தை தாயை இழந்திருக்கிறது. காலம் முழுக்க அந்த குழந்தைகள் அம்மா இல்லாமல் வாழ வேண்டும். அம்மா இல்லாமல் வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இது போன்ற நேரங்களில் ஒருவருக்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருங்கள் என்று நடிகை கல்யாணி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
மேலும் இந்த வீடியோவை வெளியிட்டு, ‛மனிதநேயம் இறந்து கொண்டிருக்கிறது, பச்சாதாபம் இறந்து கொண்டிருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.
இவர், அள்ளித்தந்த வானம், ரமணா உள்ளிட்ட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஓரிரு படங்களில் நாயகியாகவும், சீரியல்களில் நாயகியாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
497 days ago
497 days ago