ஜெய் ஆகாஷ் உடன் ஜோடி சேரும் ரேஷ்மா
ADDED : 515 days ago
சின்னத்திரை நடிகை ரேஷ்மா முரளிதரன், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து அபி டெய்லர், கிழக்கு வாசல் ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். இதில், கிழக்கு வாசல் தொடர் அண்மையில் நிறைவுற்றது. இந்நிலையில், ஜெய் ஆகாஷ் நடிக்கும் புதிய தொடரில் அவருக்கு ஜோடியாக ரேஷ்மா நடிக்க இருக்கிறார். ரேஷ்மாவை பொருத்தமட்டில் அவர் நடித்து வரும் தொடர்கள் முடிந்த கையோடு புதிய தொடரில் கமிட்டாகி ஹிட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஜெய் ஆகாஷுடானான அவரது காம்போ எப்படியிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.