தனி ஒருவன் 2ம் பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர்?
ADDED : 515 days ago
கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'தனி ஒருவன்'. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார்.
இதன் வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதிலும் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடிக்கின்றனர். ஆனால் அறிவிப்போடு மட்டுமே உள்ளது. அதேசமயம் இந்த படத்தில் வில்லனாக எந்த நடிகர் நடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் இதில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஆன அபிஷேக் பச்சன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்து இப்போது அபிஷேக் பச்சன் நடிக்கவுள்ளார் என நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.