சூர்யா 44 படப்பிடிப்பு ஜுன் முதல் ஆரம்பம்
ADDED : 501 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள அவரது 44வது படத்தின் படப்பிடிப்பு ஜுன் முதல் வாரத்தில் ஆரம்பமாக உள்ளது. அந்தமானில் உள்ள சில தீவுகளில் இதற்கான படப்பிடிப்பு சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் எனத் தெரிகிறது. அதன்பிறகு சென்னையில் படப்பிடிப்பை நடத்த உள்ளார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையமக்க உள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல். தற்போது படத்திற்கான தலைப்பு அறிவிப்பு மற்றும் அறிமுக வீடியோ ஒன்றிற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். அடுத்தவாரம் அந்த வீடியோவை வெளியிட உள்ளார்கள்.
கார்த்திக் சுப்பராஜ், சூர்யா முதல் முறையாக கூட்டணி சேர்ந்துள்ளதால் இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கார்த்திக்கின் ஸ்டைலில் வழக்கம் போல ஒரு அதிரடியான ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகும் எனத் தெரிகிறது.