அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோயிலுக்கு சென்ற ரஜினி
ADDED : 514 days ago
வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து ஓய்வெடுப்பதற்காக அபுதாபி சென்றுள்ளார் ரஜினி. இந்த நிலையில் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் அரசு ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தார்கள். அதையடுத்து அபுதாபியில் உள்ள சுவாமி நாராயணசாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் ரஜினி. அந்த கோயிலில் தலைமை அர்ச்சகரிடம் அவர் ஆசி பெற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 800 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரத்துடன் 25 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலை தான் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கோயில் வெள்ளை சலவை கற்களால் கட்டப்பட்டுள்ளது.