உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி!

பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி!

தமிழில் விஜய் ஆண்டனி நடித்த கொலை, ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் தற்காப்பு கலை பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த மீனாக்ஷி சவுத்ரி, தற்போது பாராசூட்டில் தான் பறக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . அதோடு, முதன் முதலாக பாராசூட்டில் பறக்கிறேன். மிகவும் நன்றாக இருந்தது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !