'மெய்யழகன்' ஆன கார்த்திக்
ADDED : 499 days ago
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்த்தியின் 25வது படமான 'ஜப்பான்' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் கொஞ்சம் அப்சட்டான கார்த்தி தற்போது அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி விட்டார். தற்போது அவர் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதனுடன் '96' பட புகழ் பிரேம்குமார் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
கார்த்தியின் 27வது படமான இப்படத்துக்கு 'மெய்யழகன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி மற்றும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.