உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூலை மாதத்தில் சர்தார்-2 படப்பிடிப்பு துவக்கம்

ஜூலை மாதத்தில் சர்தார்-2 படப்பிடிப்பு துவக்கம்


கடந்த 2022ம் ஆண்டில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'சர்தார்'. இதன் வெற்றியைத் தொடர்ந்து சர்தார்-2 உருவாகும் என அறிவித்தனர். இந்த இரண்டாம் பாகத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார் .இதில் கார்த்தி, ராஷி கண்ணா நடிக்கின்றனர். இந்த பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

இந்த நிலையில் இதன் படப்பிடிப்பை வருகின்ற ஜூலை மாதத்தில் தொடங்குகின்றனர். படப்பிடிப்பை அஜர்பைஜான், கஷாக்ஸ்டான் ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இரண்டு பாலிவுட் நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !