உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான் கானுக்கு வில்லனாக தென்னிந்திய நடிகர்களுக்கு முன்னுரிமை!

சல்மான் கானுக்கு வில்லனாக தென்னிந்திய நடிகர்களுக்கு முன்னுரிமை!


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் ஹிந்தியில் 'சிக்கந்தர்' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற ஜூன் மாத கடைசி வாரத்தில் தொடங்குகின்றனர். மேலும், இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தென்னிந்திய நடிகர்களான அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ் மற்றும் கார்த்திகேயா ஆகியோரிடம் முருகதாஸ் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இப்படத்தை சாஜித் நதியாடுவலா தயாரிக்கின்றார். 2025ம் ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !