உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2ம் பாகத்தில் கவின்?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2ம் பாகத்தில் கவின்?


இயக்குனர் பொன்ராம் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். ஆனால், இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சீமராஜா, டி.எஸ்.பி என தொடர்ந்து தோல்வி படமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து பொன்ராம் அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது கிடைத்த தகவலின் படி, பொன்ராம் புதிய படத்திற்காக கவின் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். இது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !