உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்திக் ராஜ் தவறனாவரா? - மீரா கிருஷ்ணன் சொன்னது என்ன?

கார்த்திக் ராஜ் தவறனாவரா? - மீரா கிருஷ்ணன் சொன்னது என்ன?

பிரபல சின்னத்திரை நடிகையான மீரா கிருஷ்ணன் தமிழ் சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் அசத்தி வருகிறார். அந்த வகையில் அவர் ஜீ தமிழின் ஹிட் தொடரான கார்த்திகை தீபம் என்கிற தொடரில் நாயகனின் அம்மாவாக நடித்து வருகிறார். கார்த்திகை தீபம் தொடரில் கார்த்திக் ராஜ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், மீரா கிருஷ்ணன் அளித்த ஒரு பேட்டியில், 'நான் சீரியலில் கமிட்டான போது பலரும் கார்த்திக் ராஜ் பற்றி தவறாக பேசினார்கள். அந்த நேரத்தில் சில சர்ச்சைகளும் வந்தது. ஆனால், சீரியலில் அவருடன் சேர்ந்து நடித்தபோது தான் அவரை பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. சீரியலில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் என்னை அம்மாவாக நினைத்து தான் பழகி வருகிறார்' என்று அந்த பேட்டியில் மீரா கிருஷ்ணன் கார்த்திக் ராஜ் பற்றி பாசிட்டிவாக கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !